லேட்டஸ்ட் செய்திகள்

உலகக் கோப்பை 2023

உலகக் கோப்பை 2023 அட்டவணை

போட்டிகள் தேதி நேரம் இடம்
இங்கிலாந்து vs நியூசிலாந்து வியாழன் அக்டோபர் 5, 2023 பிற்பகல் 02:00 அகமதாபாத்
பாகிஸ்தான் vs நெதர்லாந்து வெள்ளி அக்டோபர் 6, 2023 பிற்பகல் 02:00 ஹைதராபாத்
வங்காளதேசம் vs ஆப்கானிஸ்தான் அக்டோபர் 7, 2023 சனி காலை 10:30 மணி தர்மசாலா
தென்னாப்பிரிக்கா vs இலங்கை அக்டோபர் 7, 2023 சனி பிற்பகல் 02:00 டெல்லி
இந்தியா vs ஆஸ்திரேலியா ஞாயிறு அக்டோபர் 8, 2023 பிற்பகல் 02:00 சென்னை
மேலும் பார்க்க

உலகக் கோப்பை 2023 புள்ளி அட்டவணை

Pos Team Played Won Lost N/R Tied Net RR Points
1 இந்தியா 5 5 0 0 0 +1.353 10
2 தென்னாப்பிரிக்கா 5 4 1 0 0 +2.370 8
3 நியூசிலாந்து 5 4 1 0 0 +1.481 8
4 ஆஸ்திரேலியா 4 2 2 0 0 -0.193 4
மேலும் பார்க்க

ஐசிசி ரேங்கிங்

T20 அணி தரவரிசை

POS TEAM RATING
1 இந்தியா 264
2 இங்கிலாந்து 259
3 நியூசிலாந்து 255
4 பாகிஸ்தான் 254
5 ஆஸ்திரேலியா 250
மேலும் பார்க்க

ODI அணிகள் தரவரிசை

POS TEAM RATING
2 இந்தியா 116
2 பாகிஸ்தான் 115
3 ஆஸ்திரேலியா 112
4 தென்னாப்பிரிக்கா 106
5 இங்கிலாந்து 105
மேலும் பார்க்க

டெஸ்ட் அணி தரவரிசை

POS TEAM RATING
1 இந்தியா 118
2 ஆஸ்திரேலியா 118
3 இங்கிலாந்து 115
4 தென்னாப்பிரிக்கா 104
5 நியூசிலாந்து 100
மேலும் பார்க்க

ஐசிசி பேட்டிங் தரவரிசை

ஐசிசி T20 பேட்டிங் தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

சூர்யகுமார் யாதவ் இந்தியா 889

2

முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் 811

3

பாபர் அசாம் பாகிஸ்தான் 756

4

ஐடன் மார்க்ராம் தென்னாப்பிரிக்கா 756

5

ரிலீ ரோசோவ் தென்னாப்பிரிக்கா 702
மேலும் பார்க்க

ஐசிசி ODI பேட்டிங் தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

பாபர் அசாம் பாகிஸ்தான் 857

2

சுப்மன் கில் இந்தியா 847

3

ராஸ்ஸி வான் டெர் டுசென் தென்னாப்பிரிக்கா 743

4

ஹாரி டெக்டர் அயர்லாந்து 729

5

இமாம்-உல்-ஹக் பாகிஸ்தான் 728
மேலும் பார்க்க

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 883

2

ஜோ ரூட் இங்கிலாந்து 859

3

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 842

4

பாபர் அசாம் பாகிஸ்தான் 829

5

மார்னஸ் லாபுசாக்னே ஆஸ்திரேலியா 826
மேலும் பார்க்க

ஐசிசி பந்துவீச்சு தரவரிசை

ஐசிசி T20 பந்துவீச்சு தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

ரஷித் கான் ஆப்கானிஸ்தான் 713

2

வனிந்து ஹசரங்க இலங்கை 686

3

மகேஷ் தீக்ஷனா இலங்கை

4

அடில் ரஷித் இங்கிலாந்து 679

5

ஃபசல்ஹக் பாரூக்கி ஆப்கானிஸ்தான் 677
மேலும் பார்க்க

ஐசிசி ODI பந்துவீச்சு தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

முகமது சிராஜ் இந்தியா 680

2

ஜோஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலியா 669

3

முஜீப் உர் ரஹ்மான் ஆப்கானிஸ்தான் 657

4

ரஷித் கான் ஆப்கானிஸ்தான் 655

5

டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து 654
மேலும் பார்க்க

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 879

2

ககிசோ ரபாடா தென்னாப்பிரிக்கா 825

3

ரவீந்திர ஜடேஜா இந்தியா 782

4

ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 776

5

பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 775
மேலும் பார்க்க

ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசை

ஐசிசி T20 ஆல்-ரவுண்டர் தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் 288

2

ஹர்திக் பாண்டியா இந்தியா 240

3

முகமது நபி ஆப்கானிஸ்தான் 224

4

ஐடன் மார்க்ராம் தென்னாப்பிரிக்கா 198

5

மார்கஸ் ஸ்டோனிஸ் ஆஸ்திரேலியா 191

ஐசிசி ODI ஆல்-ரவுண்டர் தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் 349

2

முகமது நபி ஆப்கானிஸ்தான் 302

3

சிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே 287

4

ரஷித் கான் ஆப்கானிஸ்தான் 259

5

அசாத் வாலா பப்புவா நியூ கினி 248

ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை

POS PLAYER TEAM RATING

1

ரவீந்திர ஜடேஜா இந்தியா 455

2

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 370

3

ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் 332

4

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 307

5

அக்சர் படேல் இந்தியா 298

கால்பந்து

எனது ஓய்வுக்கான காலம் வெகு தொலைவில் இல்லை : ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லியோனல் மெஸ்ஸி
எனது ஓய்வுக்கான காலம் வெகு தொலைவில் இல்லை : ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லியோனல் மெஸ்ஸி

தனது ஓய்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று கருதுவதாக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த லயோனல் மெஸ்சி கடந்த ஜூன் மாதம் பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப்பில் இருந்து விலகி அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி கிளப்பில் இணைந்தார். மேஜர் லீக் போட்டியில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ள 36 வயது மெஸ்சி அர்ஜென்டினா டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், எனது வயதை கணக்கில் கொண்டால் இன்னும் எத்தனை நாட்கள் அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட முடியும் என்பது தெரியவில்லை. எனது ஓய்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று கருதுகிறேன். எனது ஓய்வுக்கான தருணம் எப்போது வரும் என்பது துல்லியமாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சாதித்து விட்ட நான் தற்போது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்' என்றார்.

ஹாக்கி

ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் - கோப்பையினை கொண்டு செல்ல பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் - கோப்பையினை கொண்டு செல்ல பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

கிரிக்கெட் மட்டுமே சிறந்த விளையாட்டு என்று இல்லை. ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஆசிய ஹாக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தி கோப்பையினை மாவட்டங்கள் தோறும் கொண்டு செல்லும் பாஸ் தி பால் பேருந்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிய மற்றும் இந்திய ஹாக்கி அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது, சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற்ற போது நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன். அப்போது சென்னையிலும் சிறந்த ஹாக்கி மைதானம் உள்ளது. சென்னையில் சர்வதேச போட்டி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் மட்டுமே சிறந்த விளையாட்டு என்று இல்லை. ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆஸ்கார் விருது வென்ற தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள பொம்மன்-க்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் லோகோவில் பொம்மனுடன் யானை இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் வீரர்களும் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவோம். முதலமைச்சர் கோப்பைக்காண மாநில விளையாட்டுப் போட்டியில் முறைகேடு நடக்கவில்லை சிலம்பம் போட்டியில் பங்கேற்ற ஒரு வீரர் மட்டும் குற்றச்சாட்டை முன் வைத்தார். விசாரித்த போது குற்றச்சாட்டு உண்மை இல்லை. அந்த வீரர் தோல்வியின் காரணமாக குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது தெரியவந்தது. முதலமைச்சர் கோப்பை போட்டியில் முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்..

மற்ற விளையாட்டுகள்

விம்பிள்டன் டென்னிஸ் : நடப்பு சாம்பியன் ரைபகினா அதிர்ச்சி தோல்வி, இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் : நடப்பு சாம்பியன் ரைபகினா அதிர்ச்சி தோல்வி, இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 6-7(3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா ( பெலாரஸ்) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை வீழ்த்தினார் . இன்னொரு கால்இறுதியில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (5-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில ரைபகினாவிடம் அடைந்த தோல்விக்கு ஜாபியர் பழிதீர்த்துக் கொண்டார். ஜாபியர் அரைஇறுதியில் சபலென்காவை இன்று சந்திக்கிறார். மற்றொரு அரைஇறுதியில் ஸ்விடோலினா(உக்ரைன்)- வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மோதுகிறார்கள். போட்டியில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபங்குடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட யுபங் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4, 5வது செட்களை மெத்வதேவ் வென்றார். இறுதியில் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்..