நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 16வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. எனவே, ஆப்கானிஸ்தான் 289 ரன் இலக்குடன் அடுத்து விளையாட ஆரம்பித்தது.
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 5வது ஓவரில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (11) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்க ஆப்கானிஸ்தான் ரன்களை எடுக்க தொடங்கியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடர்ந்து இப்ராஹிம் சத்ரான் (14), ரஹ்மத் ஷா (36), அஸ்மத்துல்லா உமர்சாய் (27), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி் (8), முகமது நபி (7), ரஷித் கான் (8), முஜீப் உர் ரஹ்மான் (28), நவீன்-உல்-ஹக் (0), ஃபசல்ஹக் பாரூக்கி (0) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் இக்ராம் அலிகில் (19) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளனர். நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை தங்களின் பந்து வீச்சால் மிரள வைத்தனர் நியூசிலாந்து அணியினர். லாக்கி பெர்குசன் (3), மிட்செல் சான்ட்னர் (3), மாட் ஹென்றி (1) , டிரெண்ட் போல்ட் (2), ரச்சின் ரவீந்திரன் (1) விக்கெட்டுகள் எடுத்து அணியை வெற்றியடைய செய்தனர்.