2023 ஆம் ஆண்டின் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியானது மார்ச் 31 அன்று தொடங்கி நேற்றைய தினம் அதாவது மே 29 ஆம் நாள் முடிவடைந்தது. இந்த ஆண்டில் சுவாரஸ்யம் என்னவென்றால், போட்டியின் முதல் ஆட்டத்தில் மோதிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணி ஆகும். அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில், குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 73வது லீக் போட்டி மும்பை இண்டியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அடுத்து மே 28 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் 2023-ன் இறுதி போட்டி நடைபெற உள்ளது....
இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஐபிஎல் அட்டவணைப் படி, போட்டிகள் முடிந்து, ஸ்கோர் பட்டியலில் அதிக ஸ்கோர்களைப் பெற்ற அணிகளுக்கு பிளே ஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில், கடந்த மே 23, 2023 அன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில், அதிரடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று, ரசிகர்களுக்கு பேரின்பத்தைத் தந்தது....
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் – 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் கண்ட ருதுராஜ் கெய்க்வாட் - டெவன் கான்வே கூட்டணி அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தனர். முதல் 10 ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடந்த நிலையில், 36 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அரைசதம் எடுத்த நிலையில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிக்ஸர் மன்னன் துபே ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் கான்வே 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களில் வெளியேறினார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசிய ராயுடு 17 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றார். இருந்தாலும், அந்த உற்சாகம் ரொம்ப நேரம் நீடிக்காமல் போனது. தோனி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். களத்தில் இருந்த மொயீன் அலி ஒரு சிக்ஸருடன் 9 ரன்களும், 2 பவுண்டரிகளுடன் ஜடேஜா 22 ரன்களும் குவித்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், தொடக்க வீரரான விருத்திமான் சாஹா 12 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னிலும் அவுட் ஆகினார். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மான் கில், மதீஷா பத்திரனா, தசுன் ஷனகா அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுக்க, 18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுக்க, அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், எப்படியும் எடுத்துவிடலாம் என்று நம்பிக்கையோடு விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது....
இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 70 ஆவது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே ஐபில் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது பெங்களூரில் எம்.சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.. இந்தப் போட்டி மே 21, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 07.30 மணி அளவில் நடந்தது....
மே 21 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 69வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். ...
மே 20 ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 68வது லீக் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
மே 20 ஆம் தேதி அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 67வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ். 20 ஓவர் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று Play-Off சுற்றுக்கு தகுதி பெற்றது. ...
இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 65 ஆவது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி மே 18, 2023 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 07.30 மணி அளவில் நடந்தது....
தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற 64வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்க்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின், ப்ரித்வி ஷா - டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால் டெல்லி அணி எவ்வித அழுத்தமும் இல்லாமல் தனது பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய வார்னர் 46 (31) ரன்களிலும், ப்ரித்வி ஷா 54(38) ரன்களிலும் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து ஒண்டவுன் இறங்கிய ரூசோ பஞ்சாப் பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டதால்கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 214 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி தொடக்கம் கொடுத்தார். கடந்த போட்டியில் செஞ்சுரி விளாசிய பிரப்சிம்ரன் சிங், இம்முறை 22 ரன்களோடு நடையைக் கட்டினார். எனினும், அதர்வா தைடே மற்றும் லிவிங்ஸ்டோன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், பஞ்சாப் வெற்றியை நோக்கி நகர்ந்தது. அதர்வா தைடே, அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேற, லிவிங்ஸ்டோன் 94 மட்டும் அணியை காப்பாற்ற தனியாளாக போராடினார். அவருக்கு கைகொடுக்க மற்ற வீரர்கள் தவறியதால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது....