இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு

இன்று பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ ஸ்டேடியத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 19வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
நெதர்லாந்து அணி பேட்டிங்
நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 3வது ஓவரில் விக்ரம்ஜித் சிங் (4) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கொலின் அக்கர்மேன் களமிறங்க நெதர்லாந்து ரன்களை எடுக்க தொடங்கியது. விக்ரம்ஜித் சிங் தொடர்ந்து மேக்ஸ் ஓ'டவுட் (16), பாஸ் டி லீடே(6), தேஜா நிடமானுரு (9), ஸ்காட் எட்வர்ட்ஸ் (16), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் (70), லோகன் வான் பீக் (59), ரோலோஃப் வான் டெர் மெர்வே (7), பால் வான் மீகெரென் (4), எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ஆர்யன் தத் (9) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நெதர்லாந்து அணி 50 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் தில்ஷான் மதுஷங்க (4), கசுன் ராஜித் (4), மகேஷ் தீக்ஷனா(1) விக்கெட்டுகள் எடுத்தனர்.