இன்றைய செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் : நடப்பு சாம்பியன் ரைபகினா அதிர்ச்சி தோல்வி, இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் : நடப்பு சாம்பியன் ரைபகினா அதிர்ச்சி தோல்வி, இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 6-7(3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா ( பெலாரஸ்) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை வீழ்த்தினார் . இன்னொரு கால்இறுதியில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (5-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில ரைபகினாவிடம் அடைந்த தோல்விக்கு ஜாபியர் பழிதீர்த்துக் கொண்டார். ஜாபியர் அரைஇறுதியில் சபலென்காவை இன்று சந்திக்கிறார். மற்றொரு அரைஇறுதியில் ஸ்விடோலினா(உக்ரைன்)- வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மோதுகிறார்கள். போட்டியில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபங்குடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட யுபங் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4, 5வது செட்களை மெத்வதேவ் வென்றார். இறுதியில் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்....

டி.என்.பி.எல். கிரிக்கெட் : நெல்லையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது கோவை
டி.என்.பி.எல். கிரிக்கெட் : நெல்லையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது கோவை

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லையை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு நெல்லையில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், நெல்லை ராயல் கிங்சும் கோதாவில் குதித்தன. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த கோவைக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. சுஜய் 7 ரன்னிலும், சச்சின் 12 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் நெல்லை பந்து வீச்சை அடித்து நொறுக்கி அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்தினர். விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் 57 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அடுத்து வந்த கேப்டன் ஷாருக்கான் (7 ரன்) தாக்குப்பிடிக்காவிட்டாலும், முகிலேசும், அதீக் உர் ரகுமானும் இணைந்து ரன்மழை பொழிந்ததுடன், ஸ்கோர் 200-ஐ கடப்பதற்கும் உதவினர். 20 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ரகுமான் 50 ரன்களில் (21 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் கோவை அணி 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. முகிலேஷ் 51 ரன்னுடனும், ராம் அரவிந்த் 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். பிற்பகுதியில் நெல்லையின் பீல்டிங் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச்சுகளை தவற விட்டனர். இதுவும் கோவையின் எழுச்சிக்கு சாதகமாக மாறியது. பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய நெல்லை அணியில் நிரஞ்ஜன் (0), முந்தைய ஆட்டத்தின் 'ஹீரோ' அஜிதேஷ் (1 ரன்) 2-வது ஓவருக்குள் வீழ்த்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து நெருக்கடியில் இருந்து நெல்லையால் மீள முடியவில்லை. மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த நெல்லை அணி 15 ஓவர்களில் 101 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் கோவை அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. நெல்லை அணியில் அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 27 ரன்கள் எடுத்தார். கோவை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜதாவேத் சுப்பிரமணியன் 4 விக்கெட்டும், ஷாருக்கான் 3 விக்கெட்டும் அறுவடை செய்தனர். டி.என்.பி.எல். கோப்பையை கோவை கிங்ஸ் வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் கோப்பையை பகிர்ந்து இருந்தது. மகுடம் சூடிய கோவைக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த நெல்லைக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது....

விம்பிள்டன் தொடர் : அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி
விம்பிள்டன் தொடர் : அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 7-ம் நிலை வீரர் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் முதல் செட்டை இழந்தார். சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் ஜோகோவிச் 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரோமன் சபியுலினுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் கூட்டணி டேவிட் பெல் (நெதர்லாந்து)-ரீஸ் ஸ்டால்டெர் (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் போபண்ணா- மேத்யூ எப்டென் கூட்டணி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் டேவிட் பெல் - (அமெரிக்கா) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது...

விம்பிள்டன் : காலிறுதிக்கு ஜோகோவிச் முன்னேற்றம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா வெற்றி
விம்பிள்டன் : காலிறுதிக்கு ஜோகோவிச் முன்னேற்றம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா வெற்றி

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், செர்பிய வீரர் ஜோகோவிச் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முந்தைய நாள் பாதியில் நிறுத்தப்பட்ட நடப்பு சாம்பியனும், 2-வது நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஹூபெர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) இடையிலான ஆட்டம் நேற்று தொடர்ந்து நடந்தது. அனல் பறந்த இந்த மோதலில் ஜோகோவிச் 7-6 (8-6), 7-6 (8-6), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஹர்காக்சை சாய்த்தார். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 3 மணி 7 நிமிடம் தேவைப்பட்டது. 7 முறை சாம்பியனான ஜோகோவிச் கால்இறுதியில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவை சந்திக்கிறார். மற்றொரு ஆடடத்தில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-7 (4-7), 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் 43-ம் நிலை வீரர் கிறிஸ்டோபர் யுபங்க்சிடம் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஜாக்கப் பியர்னி- ஜோகனஸ் மன்டேவை வீழ்த்தி 3-வது சுற்றை அடைந்தது. முன்னதாக 'நம்பர் ஒன்' வீராங்கனையும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் தோல்வியின் விளிம்பில் இருந்து தள்ளாடி மீண்டார். அவர் ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச்சுடன் (சுவிட்சர்லாந்து) மோதினார். இதில் முதல் செட்டை இழந்து 2-வது செட்டில் இரண்டு முறை மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தப்பித்த ஸ்வியாடெக் அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி கண்டு 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் பென்சிச்சை சாய்த்து விம்பிள்டனில் முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 3 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2-6, 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) தோற்கடித்தார்....

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : கால் இறுதிக்கு ஸ்வியாடெக் தகுதி; ஜோகோவிச் ஆட்டம் பாதியில் நிறுத்தம்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : கால் இறுதிக்கு ஸ்வியாடெக் தகுதி; ஜோகோவிச் ஆட்டம் பாதியில் நிறுத்தம்

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் உலகில் நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக், கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் 14-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கை எதிர்கொண்டார். இதில் ஸ்வியாடெக் 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த லெசியா சுரென்கோவை வீழ்த்தினார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 19-வது வரிசையில் உள்ளவருமான அசரென்கா (பெலாரஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 2-6, 6-4, 6(9)-7(11) என்ற செட் கணக்கில் சுவிட்டோலினாவிடம் தோற்றார். கால்இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்- சுவிட்டோலினா, பெகுவா- வாண்ட்ரூ சோவா மோதுகிறார்கள். 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் போலந்தை சேர்ந்த 17-ம் நிலை வீரர் ஹூபர்ட் ஹூர்காசை எதிர்கொண்டார். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் போலந்தை சேர்ந்த 17-ம் நிலை வீரர் ஹூபர்ட் ஹூர்காசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 7-6(8-6), 7-6(8-6) என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரவு 11 மணி ஆனதால் போட்டி நிறுத்தப்பட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். 8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-6 (7-4), 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவை சேர்ந்த டேனியல் கேலனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்....

சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தயாரித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் சென்னை வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தயாரித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் சென்னை வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, தனது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ மூலமாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழில் ‘எல்ஜிஎம்’ (Let’s Get Married) என்ற படத்தை தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இது இந்நிறுவனம் தயாரித்துள்ள முதல் திரைப்படம். இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக தோனி தற்போது சென்னை வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி சாக்‌ஷி தோனியும் வந்துள்ளார். அப்போது தோனிக்கு, ஐபிஎல் கோப்பையின் மாதிரியோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூடி தோனி.. தோனி.. என்று கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சூழ தோனி சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். ஐபிஎல் தொடருக்கு பின் தோனி முதல்முறையாக சென்னை வந்துள்ளார் தோனிக்கு, ரசிகர்கள் மலர் தூவியும், தோனி தோனி என கோஷமிட்டும், உற்சாக வரவேற்பளித்தனர். தோனியை வரவேற்ற ரசிகர்கள், ஐபிஎல் கோப்பையின் மாதிரியை வைத்திருந்தனர். ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்தும் தோனி, தற்போது ஐபிஎல்-க்கு பிறகு புதிய ஹேர் ஸ்டைலுடன் கவனம் ஈர்க்கிறார். தோனிக்கு இந்த ஹேர் ஸ்டைல் கச்சிதமாக பொருந்தி உள்ள ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே இன்று நடக்கவுள்ள எம்ஜிஎம் படத்தின் விழா மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மைக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரமேஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நடிகை நதியா, நடிகர் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார்....

செல்லப் பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய தோனி.. ஜாலி வீடியோ வெளியீடு! | Dhoni's Birth Day Viral Video
செல்லப் பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய தோனி.. ஜாலி வீடியோ வெளியீடு! | Dhoni's Birth Day Viral Video

மும்பை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தனது 42வது பிறந்தநாளை செல்லப் பிராணிகளுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக டி20, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட மூன்று விதமான கோப்பைகளை வென்றவர் தல தோனி. அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார் எம்எஸ் தோனி.  இந்த நிலையில் நேற்று 42வது பிறந்தநாளை தோனி கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சமகால கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தவாறு புகைப்படங்களை பகிர்ந்தும், கட் அவுட் வைத்தும், ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எம்எஸ் தோனி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அந்தப் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் திருவிழாவைப் போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் ராஞ்சியில் உள்ள ரசிகர்கள் சிலர் தோனியின் வீட்டின் முன் குவிந்தனர். இதனையறிந்த தோனி, தனது வீட்டில் மேல் வந்து ரசிகர்களுக்கு கைகளையாட்டி சென்றார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக ட்ரெண்டாகியது. இந்த நிலையில் தோனி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஹர்ஷா போக்ளே என்ன பதிவிட்டுள்ளாரோ, அதனையே தோனியும் செய்திருக்கிறார். சாதாரண கேக்கை வெட்டி தனது செல்லப் பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை வெட்டி ஒவ்வொரு துண்டாக ஒவ்வொரு நாய்-க்கும் வீச, அந்த கேக்கை அனைத்து நாய்களும் சரியாக கேட்ச் பிடித்து சாப்பிடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது....

விம்பிள்டன் தொடர் : முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் தொடர் : முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது....

 பிசிசிஐ கொண்டுவரும் புதிய விதிமுறையால் அம்பதி ராயுடுவுக்கு  ஆப்பு... போட்டத்திட்டம் பொசுக்கின போனதால் வீரர் விரக்தி...
பிசிசிஐ கொண்டுவரும் புதிய விதிமுறையால் அம்பதி ராயுடுவுக்கு ஆப்பு... போட்டத்திட்டம் பொசுக்கின போனதால் வீரர் விரக்தி...

வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் பங்கேற்கதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் இருந்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு விலகியுள்ளார்....

விம்பிள்டன் : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், அல்காரஸ்
விம்பிள்டன் : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், அல்காரஸ்

விம்பிள்டன் தொடரில் மூன்றாவது சுற்றில் விளையாடிய ஜோகோவிச், சுவிட்சர்லாந்து வீரரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரின்காவை எதிர்கொண்டார்....