கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்து அசத்தல்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரர்களில் முதன்மையானவராக விளங்கும் போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் வீரராக முக்கிய உலகசாதனை படைத்து அசத்தியுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் ரொனால்டோவின் ஆட்டத்தை காண்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, போர்ச்சுகல் அணிக்காக 2003 ஆண்டு முதல் விளையாடி வரும் ரொனால்டோபல போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றிகளை பெற்று தந்துள்ளார். குறிப்பாக 5 உலக கோப்பை தொடர்களில் தனது அணிக்காக கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் கடந்த உலக கோப்பை தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்து அசத்தினார்.
சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரில் முக்கிய போட்டிகளில் ரொனால்டோ ப்ளேயிங் லெவனில் இடம் பெறாதது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக பலராலும் பேசப்பட்டு வந்தது. மேலும் கடந்த உலக கோப்பையில் போர்ச்சுகல் தோல்வியை தழுவி வெளியேறிய நிலையில் 38 வயதான போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ உடைய கால்பந்து பயணம் முடிவுக்கு வந்ததாகவும் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற யூரோ 2024 கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் அணிக்காக 2 கோல்கள் பதிவு செய்து 4-0 என்ற நிலையில் லிச்சென்ஸ்டீன் அணியை தோற்க்கடித்தார். இதன் மூலம் ஆடவர் கால்பந்து பிரிவில் சர்வதேச போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக 120 கோல்கள் பதிவு செய்ததன் மூலம், சர்வதேச போட்டிகளில் 100 முறை கோல்கள் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐரோப்பிய 2024 தகுதிச் சுற்றில் லிச்சென்ஸ்டீன் எதிராக விளையாடிய போட்டியின் மூலம், சர்வதேச தொடரில் தனது 197 வது போட்டியில் விளையாடினார், இதன்மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்று புதிய சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் குவைத் அணியை சேர்ந்த படர் அல்-முதாவா 196 போட்டிகளில் விளையாடிய தான் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.