உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் நிலை..?? வாழ்வா..! சாவா..! இறுதி லீக் போட்டி ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 19, 2023 & 12:12 [IST]

Share

இந்தியாவில் உள்ள புவனேஸ்வரில்  ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது, இதில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது தனது இறுதி லீக் சுற்று போட்டியில் வேல்ஸ் அணியுடன் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது.இந்த போட்டியின் முடிவில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு செல்லும் சாத்திய கூறுகளை காண்போம்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி கடைசியாக 1975 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை வென்றாலும், அண்மையில் நடைபெற்று வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது எனவே இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாதிக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  

இந்த ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற நிலையில் வெற்றி பெற்றது.அதன் பின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் கோல் ஏதும் அடிக்காமல் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் புள்ளிபட்டியலில் குரூப் டி பிரிவில் இருக்கும் இந்திய அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது,அதே பிரிவில் 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி கோல்கள் அதிகம் பதிவு செய்த நிலையில் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அணி அடுத்து கடைசி லீக் போட்டியில் வேல்ஸ் அணியுடன் இன்று (19/01/2023) விளையாட உள்ளது,இந்த போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி விளையாட உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக காலிறுதிக்குள் செல்லும் வாய்ப்பு உறுதியாகி விடும், மாறாக இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் உலக கோப்பை கனவு இதோடு முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதும் போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது ,ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியை காண மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.