சவிதாவின் அதிரடி.. வீழ்ந்தது கனடா.. இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!!

Representative Image. Representative Image.

By Sekar Published: July 12, 2022 & 13:40 [IST]

Share

இன்று ஸ்பெயினில் நடந்த மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையின் வகைப்படுத்தல் ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந் த நிலையில், சவிதா பூனியாவின் அதிரடியால் இந்தியா ஷூட் அவுட்டில் கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.

முன்னதாக ஸ்பெயினிடம் தோல்வியைத் தழுவிய இந்தியா, இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷத்துடன் தாக்குதலுடன் தொடங்கியது.

எனினும் இந்திய வீராங்கனைகளின் ஆக்ரோஷத்தை ஒருவழியாக சமாளித்த கனடா இறுதியில் 1-1 என சமன் செய்தது.

ஆனால் ஷூட் அவுட்டில் கெத்து காட்டிய இந்திய மகளிர் படை கனடாவை பந்தாடி 3-2 என்ற கோல்கணக்கில் வென்றது. இந்த வெற்றியை அடுத்து, அடுத்து நடக்கும் பிளே-ஆஃப் ஆட்டத்தில் இந்தியா நாளை ஜப்பானை எதிர்கொள்கிறது.