இந்திய ஹாக்கி அணியின் போராட்டம் வீண்..! காலிறுதி சுற்றுக்கு செல்ல மேலும் ஒரு போட்டி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 20, 2023 & 09:50 [IST]

Share

ஹாக்கி உலக கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள புவனேஸ்வரில் நடந்து வருகிறது, இந்த உலக கோப்பை தொடரை இந்திய அணி கண்டிப்பாக கைப்பற்றும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள். இந்த தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றியுடன் தொடங்கினாலும் தற்போது அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய போராடி வருகிறது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற கடைசி லீக் சுற்றில் வேல்ஸ் அணியுடன் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்று மோதியது, இந்த போட்டியில் முதலில் அதிரடியை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள் ஷம்ஷேர் சிங் (22) மற்றும் ஆகாஷ்தீப் சிங் (33) இருவரும் தல ஒரு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.

அதன்பின் வேல்ஸ் வீரர்கள்  கரேத் ஃபர்லாங் (43) மற்றும் ஜேக்கப் டிராப்பர்(45) தலா ஒரு கோல்கள்  அடித்து போட்டியை சமன் செய்தார்கள்.அடுத்தாக இந்திய அணி ஆகாஷ்தீப் சிங் (46) தனது இரண்டாவது கோலை அடித்தார் பிறகு இந்திய  வீரர் ஹர்மன்பிரீத் சிங்(60) ஒரு கொலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.     

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் குரூப் டி இரண்டாவது இடத்தில் தான் உள்ளது, ஏனென்றால் அதே பிரிவில் இருக்கும் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பெற்றிருந்தாலும்  அதிக கோல்கள் அடிப்படையில் முதலிடம் பெற்று காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

உலக கோப்பை ஹாக்கி தொடரை பொறுத்தவரை மொத்தம் நான்கு பிரிவுகளில் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு செல்லும் ,மேலும் எ ,பி ,சி ,டி ஆகிய பிரிவுகளில் 2 வது மற்றும் 3 வது இடத்தை பிடிக்கும் அணிகள்  அடுத்த பிரிவுகளில் உள்ள அணிகளுடன் கிராஸ் ஓவர் சுற்றில் விளையாடி வெற்றி பெற்ரூ  அதில் தேர்ச்சி பெறும் நான்கு அணிகள் காலிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற குரூப் சி பிரிவில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் கிராஸ் ஓவர் சுற்றில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி கலிங்கா மைதானத்தில் விளையாட உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு இந்திய அணி செல்லும் என்றும் ஹாக்கி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள்.