ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று அருண் ஜெட்லி டெல்லி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 13வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. எனவே, இங்கிலாந்து 285 ரன் இலக்குடன் அடுத்து விளையாட ஆரம்பித்தது.
இங்கிலாந்து அணி பேட்டிங்
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 2வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் (2) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்க இங்கிலாந்து ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது ஜானி டேவிட் மாலன்(32) (12 ) வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு ஹாரி புரூக் அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். டேவிட் மாலன் தொடர்ந்து ஜோ ரூட் (11), ஜோஸ் பட்லர் (9), ஹாரி புரூக் (66),, லியாம் லிவிங்ஸ்டன் (10), சாம் கர்ரன் (10), கிறிஸ் வோக்ஸ் (9) , அடில் ரஷித்(20) , மார்க் வூட்(18) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ரீஸ் டோப்லி (15) ஆட்டமிழக்காமல் இருந்தார்.்.
இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முஜீப் உர் ரஹ்மான் (3), ரஷித் கான் (2) , முகமது நபி (2) , நவீன்-உல்-ஹக் (1) , ஃபசல்ஹக் பாரூக்கி(1) விக்கெட்டுகள் எடுத்தனர்.