பிபா கால்பந்து உலகக்கோப்பையில் செனகல் அணியை வென்றது நெதர்லாந்து அணி

Representative Image. Representative Image.

By Sekar Published: November 22, 2022 & 14:15 [IST]

Share

குரூப் -எ பிரிவின் இரண்டாவது போட்டி :

பிபா உலகக்கோப்பை தொடர் கத்தார் நகரில் கோலாகலமாகத்  தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் குரூப்-எ பிரிவில் உள்ள அணிகள் கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகும். உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில்  கத்தார் அணியை ஈக்வடார் அணி தோற்கடித்தது. நேற்றைய ஆட்டத்தில் குரூப்-எ பிரிவில் இருக்கும் மற்றும் இரண்டு அணிகளான செனகல் மற்றும் நெதர்லாந்து, அல் துமாமா மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில்  செனகல் அணியை தோற்கடித்தது.

 

இருஅணிகளின் போராட்டம் :

உலகக்கோப்பை அரங்கில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் செனகல் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோலுக்கான வாய்ப்பை நோக்கி ஆடினார்கள்.

இரு அணிகளின் தொடர்ச்சியான சிறந்த ஆட்டத்தினால் ஆட்டத்தின் முதல்பாதி கோல் ஏதும் அடிக்காமலேயே  நகர்ந்தது. மேலும் இரு அணி வீரர்களும் தங்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இரண்டாம் பாதியின் 84-வது நிமிடத்தில்  நெதர்லாந்து அணி வீரரான "கோடி காக்போ" தங்கள் அணிக்கான முதல் கோலை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றி நெதர்லாந்து ரசிகர்கள் முகத்தில் புன்னகையைப்  பதித்தார். 

இதை சற்றும் எதிர்பாரத  செனகல் அணிக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக ஆட்டத்தின் இறுதியில் நெதர்லாந்து வீரர் "டேவி கிளாசென்" ஒரு கோலை அடித்து தங்கள் அணியின் ஸ்கோரை 2-0 என்ற நிலையில் மாற்றினார்.

இறுதிவரை போராடிய  செனகல் அணி  நெதர்லாந்து அணியின் கடைசிநேர இரண்டு கோல்களால்  தோல்வியைத்  தழுவியது. இதன்மூலம் குரூப் -எ பிரிவில் முதல் இடத்தைப்  பிடித்தது நெதர்லாந்து அணி வரும் நாட்களில் அதே பிரிவில் உள்ள கத்தார் மற்றும்  ஈக்வடார் அணிகளைக் களத்தில் சந்திக்க உள்ளது.