FIFA World Cup 2022 : மல்லுக்கட்டிய கனடா.. இறுதியில் போராடி வென்ற பெல்ஜியம்!
![FIFA World Cup 2022 : மல்லுக்கட்டிய கனடா.. இறுதியில் போராடி வென்ற பெல்ஜியம்!](https://www.sportspartans.com/assets/uploads/news-1232.jpg)
FIFA World Cup 2022 : உலகக்கோப்பையின் மற்றுமொரு ஆட்டத்தில் நேற்று குரூப்-F பிரிவில் இருக்கும் பெல்ஜியம் மற்றும் கனடா அணிகள் மோதின. கால்பந்து உலகத்தரவசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாததால் இந்த உலகக்கோப்பை 2022 மிகவும் முக்கியமாக கருதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பெல்ஜியம் மற்றும் கனடா அணிகள் அஹ்மத் பின் அலி மைதானத்தில் தங்கள் முதல் போட்டியைத் தொடங்கின. இந்த போட்டியின் ஆரம்பம் முதலே கனடா அணி தனது சிறப்பான ஆட்டத்தினால் பெல்ஜியம் அணிக்கு கோலுக்கான வாய்ப்பு ஏதும் தராமல் விளையாடியது.
அதே சமயம் பலமுறை கோல் அடிக்க முயன்ற கனடா அணிக்கும் எதுவும் சாதகமாக அமையவில்லை. இதனால் கோல் ஏதும் பதிவாகமலே போட்டி நகர்ந்தது. பின்பு பெல்ஜியம் அணிக்கு ஆதரவாக அந்த அணியின் வீரர் மிச்சி பாட்சுவாய் துரிதமாக செயல்பட்டு ஒரு கோலை அடித்தார். இதன் மூலம் 1-0 என்று பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது.
இந்த ஆட்டத்தின் இறுதிவரை கனடா வீரர்களின் கோலுக்கான அனைத்து முயற்சிகளும் பெல்ஜியம் அணியால் முறியடிக்கப்பட்டது. இதனால் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் பெல்ஜியம் அணியின் இந்த ஆட்டம் பெரியளவில் இல்லை என்றாலும் போட்டியை வென்றதன் மூலம் அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. வரும் நாட்களில் பெல்ஜியம் அணியின் சிறந்த ஆட்டத்தை காண காத்திருப்போம்.