பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிக்கான போட்டி… அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணி இது தான்…

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: November 29, 2022 & 12:30 [IST]

Share

உலகக்கோப்பை நேற்றைய போட்டியில் குரூப்-ஜி பிரிவில் இருக்கும் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் தங்கள் இரண்டாவது போட்டியை தோஹாவில் உள்ள மைதானம் 974 விளையாடின. தங்கள் முதல் போட்டியில் இருஅணிகளும் வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியில் வென்றால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறலாம் என்ற நோக்கில் இருஅணிகளும் களமிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

போட்டி தொடங்கியவுடன் இரு அணி வீரர்களும் முழுவீச்சில் கோல் அடிக்கும் முனைப்பில் செயல்பட்டார்கள்.

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை அவருக்குப் பதிலாக லூகாஸ் பகுயட்டா சேர்க்கப்பட்டார், இருஅணிவீரர்களும் சமனான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரேசில் அணி வீரர்களின் கோல் வாய்ப்புகளை சுவிட்சர்லாந்து அணியின் கோல்கீப்பர் சோம்மர் முறியடித்தார். இதனால் போட்டியின் முதல்பாதி கோல் ஏதும் பதிவாகாமலே முடிவடைந்தது.

 

இந்த போட்டியின் இரண்டாவது பாதியின் 64-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் அடித்த கோலை ஆப்-சைடு என்று மறுக்கப்பட்டது,இதை ஏதும் மனதில் கொள்ளாமல் தொடர்ந்து விளையாடிய பிரேசில் அணியின் முயற்சிக்கு பலனாக போட்டியின் 83-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் கேஸ்மிரோ தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

இதன்மூலம் பிரேசில் அணி முன்னிலையிலிருந்தது ,ஆட்டத்தின் இறுதிவரை சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் பதில் கோல் ஏதும் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி தனது பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்குச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.