தியான அறையை உடலுறவுக்காக பயன்படுத்தாதீர்கள் : விம்பிள்டன் நிர்வாகம் எச்சரிக்கை

லண்டன் : இங்கிலாந்தில் கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண வந்த ஜோடி ஒன்று தியான அறையில் பாலியல் உறவில் ஈடுபட்டது சர்ச்சையானது.
இங்கிலாந்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக அமைதி அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறையில், இறை வணக்கம், தியானம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ரசிகர்கள் தங்கி கொள்ளலாம். சார்ஜிங் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
கடந்த வருடம் 12-வது கோர்ட் அருகே உள்ள அறையில் ஒரு ஜோடி உடலுறவு கொண்டதாகவும், ரசிகர்கள் முகம் சுழித்ததாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விம்பிள்டன் நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது. பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான இடத்தில் இப்படி செய்யலாமா?, அந்த இடத்தை ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வாய்ப்பாக அந்த இடம் உள்ளது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதை எதிர் பார்க்கிறோம். அந்த இடத்திற்கான மதிப்பை ரசிகர்கள் வழங்க வேண்டும்'' என இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பு நிர்வாக தலைவர் சாலி பால்டன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இதுபோன்று எதுவும் நடந்து விட கூடாது என்பதற்காக விம்பிள்டன் போட்டி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அனைத்து இங்கிலாந்து புல்வெளி டென்னிஸ் கிளப்பின் தலைமை செயல் அதிகாரி சல்லி போல்டன் கூறும்போது, அறையை மக்கள் சரியான வழியில் பயன்படுத்துகின்றனர் என உறுதி செய்யப்படும். அமைதி அறை என்றால் அதில் பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். ஜோடிகள் நெருக்கத்துடன் இருக்க பயன்படுத்த கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.