இரவு முழுவதும் செய்துவிட்டு அடுத்த நாள் 250 ரன்களை விளாசியவர் கோலி: இஷாந்த் சர்மா சீக்ரெட்

கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே பார்ட்டி செய்வது உண்டு. ஐபிஎல் தொடரின் போதெல்லாம் சில சமயங்கள் பார்ட்டி எல்லையை மீறும். இந்த நிலையில் விராட் கோலி குறித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் ஷர்மா தெரிவித்துள்ள கருத்து தற்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஷாந்த் சர்மா கூறுகையில், விராட் கோலியின் பார்ட்டி மீதான ஆர்வம் மற்றும் டேட்டோக்கள் மீதான ஆர்வம் என அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் இருவரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் விளையாடினோம். அப்போது விராட் கோலி களத்தில் நின்று கொண்டிருந்தார். அடுத்த நாள் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் விராட் கோலி அன்று இரவு தொடர்ந்து பார்ட்டி செய்து வந்தார்.
ஆனால் அடுத்த நாள் விராட் கோலி 250 ரன்கள் விளாசினார். எனக்கு இது ஆச்சரியத்தை கொடுத்தது. இரவு முழுவதும் பார்ட்டி செய்துவிட்டு எப்படி இவர் களத்தில் சிறப்பாக விளையாடினார் என்று எனக்கு தோன்றியது. விராட் கோலியின் வாழ்க்கையை ஒவ்வொரு பகுதியாக நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவருக்கு நடந்த சிறந்த விஷயமே 2012 ஆம் ஆண்டு தனது உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்தது தான்.
உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் விராட் கோலி தனது கிரிக்கெட்டுக்காக பலவற்றையும் தியாகம் செய்தார். எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் கொண்டார். இதன் மூலம் அவருடைய மனது மற்றும் கிரிக்கெட் வேற லெவலுக்கு சென்றது. சச்சின் எப்போதுமே எங்களுக்கு சொல்வது உண்டு. நம்பிக்கை என்பது வார்த்தை கிடையாது அது ஒரு உணர்வு என்பார்.
ஆனால் நீங்கள் விராட் கோலியிடம் பேசினால் அவருடைய அகராதியில் நம்பிக்கை என்ற வார்த்தை கிடையாது. அதற்கு பதில் தன்னம்பிக்கை உறுதி என்ற வார்த்தைகள் தான் இடம் பெற்றிருக்கும். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் விராட் கோலியின் அட்வைஸ் ஆக இருந்தது என தெரிவித்துள்ளார்.