சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் தலைமையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்..!

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட பலர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை எதிர்த்து போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள், இவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் தொடரில் பதக்கங்களை வென்ற முன்னணி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா தலைமையில் பல மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் குறித்து அவர்களிடம் கேட்ட பொழுது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுக்கு தேவையான நலன்களை செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்க வேண்டும் ஆனால் இங்கு அதற்கு மாறாக மல்யுத்த வீரர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
மேலும் மல்யுத்த வீரர்களின் நலனில் சிறிது கூட அக்கறை காட்டாத இந்த தலைமை மல்யுத்த கூட்டமைப்பை எதிர்க்க வேண்டும் மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் போராட்டத்தில் களமிறங்கி உள்ளோம் என்று கூறினார்கள்.
இந்த போராட்டம் குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அளித்த பதில், அனைத்து மல்யுத்த வீரர்களும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கான தகுதி சுற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்தோம் ,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தேவை இல்லாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்கள்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து தீர்வு காணும் வகையில் விளையாட்டு அமைச்சகம் சார்பில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,மேலும் தங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எந்தவிதமான மல்யுத்த போட்டிகளிலும் மல்யுத்த வீரர்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.