ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரபல பளு தூக்கும் வீராங்கனை ..! நான்கு ஆண்டுகள் தடைக்கு வாய்ப்பு ..?

இந்தியாவிற்காக காமன்வெல்த் போட்டியில் இரண்டு முறை தங்கம் வென்று அசத்திய பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு தற்போது ஊக்க மருந்து பயன்படுத்த பட்ட விவாகரத்தில் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் சார்பில் குற்றம் சாற்றப்பட்ட நிலையில் ,தாற்காலிகமாக போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சஞ்சிதா சானு கடந்த செப்டம்பர் மாதம் குஜராத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார்,இதில் பெண்களுக்கான 49-கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார்.அதே பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு தங்க பதக்கத்தை வென்றார்.
இந்த போட்டியில் வென்றவர்களுக்கு ஊக்க மருந்து சோதனை வழக்கம் போல் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு அந்த சோதனையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அண்மையில் அந்த மாதிரிகளின் முடிவுகள் வெளியானது.
இதில் சஞ்சிதா சானு மாதிரிகள் சோதிக்கப்பட்ட பின் அனபோலிக் ஸ்டீராய்டு ட்ரோஸ்டானோலோன் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இந்த சோதனையின் முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் சஞ்சிதா சானு தற்காலிக மாக போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தால் ட்ரோஸ்டானோலோன் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,மேலும் மருத்துவ நிபுணர்களின் ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்தது என்னவென்றால் ட்ரோஸ்டானோலோன் மார்பக புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும்.இதைப் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் தசை சோர்வுகள் உடனடியாக சரியாகி புத்துணர்வு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
சஞ்சிதா சானுவின் மீது இருக்கும் ஊக்க மருந்து புகார் விசாரணையில் நிரூபிக்க பட்டால், 4 ஆண்டுகள் அனைத்து விதமான போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது ,மேலும் தேசிய போட்டியில் வென்ற வெள்ளி பதக்கமும் பறிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு ஒருமுறை ஊக்க மருந்து விவகாரத்தில் சஞ்சிதா சானு மீது குற்றம் சுமத்தப்பட்டு மீண்டும், அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மீண்டும் சஞ்சிதா ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி இருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.