பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றார் ..!! ரசிகர்களுக்கு பிரியாவிடை..!!

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முன்னதாக கூறியது போல், துபாயில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்ற நேற்று தனது இறுதி போட்டியில் விளையாடிய பிறகு தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்தார்.
அதாவது சானியா மிர்சா சமீபத்தில் அளித்த பேட்டியில் துபாயில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் தொடருக்கு பிறகு தனது டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து பெற போவதாக அறிவித்தார், அதன்படி இரட்டையர் மகளிர் பிரிவில் அமெரிக்கா வீராங்கனை மெடிசின் கி உடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.
இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக 4-6, 0-6 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா ஜோடி தோல்வியுற்ற நிலையில் தொடரில் இருந்து வெளியேறி சர்வதேச டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார், இந்தியாவின் மிக சிறந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான் என்று கூறினால் மிகையில்லை.
சானியா மிர்சா மகளிர் ஒற்றையர் பிரிவில் காயம் காரணமாக பெரிய அளவில் சாதிக்க இயலாத நிலையில், இரட்டையர் பிரிவில் களமிறங்கி அசத்திய சானியா மிர்சா இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்று அசத்தியுள்ளார்.தனது 20 வருட டென்னிஸ் பயணத்தில் பல சிறப்புகளை இந்தியாவிற்கு பெற்று தந்த சாய்னா, குறிப்பாக மகளிர் இரட்டையர் பிரிவில் 91 வாரம் தொடர்ந்து சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் இருந்து அசத்தினார்.
சானியா மிர்சா தனது ஓய்விற்கு பிறகு பெண் குழந்தைகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார், வாழ்க்கையில் பல தடைகள் வரும் பல பிரச்சனைகள் வரும் அனைத்தையும் எதிர்த்து நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி பெறலாம் என்றெல்லாம் கூறினார், தான் அடுத்து இளம் டென்னிஸ் வீராங்கனைகளின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்பேன் என்றும் கூறினார்.
இந்திய டென்னிஸ் விளையாட்டிற்கு அடையாளமாக இருந்த சானியா மிர்சா ஓய்வடைந்த நிலையில் இந்திய ரசிகர்கள் உட்பட பலர் தங்கள் நன்றிகளையும் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.