பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ஓய்வை அறிவித்தார்..!

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்,வரும் பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள பெண்கள் டென்னிஸ் சங்கம் 1000-வது நிகழ்வு தொடர் தான் தனது கடைசி தொடராக இருக்கும் என்று சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
பெண்கள் டென்னிஸ் சங்கம் 1000 நிகழ்வாக துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் பிப்ரவரி 19 அன்று தொடங்குகிறது,இதில் பங்கேற்கும் உலக இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா அந்த தொடரின் முடிவில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று அண்மையில் அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சானியா மிர்சா தொடர்ந்து தனது காலில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வந்தார் கடந்த 2022 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முடிவிலேயே ஓய்வு பெறலாம் என்று முடிவெடுத்துள்ளார்,அதன்பின் சானியாவிற்கு முழங்கையில் காயம் ஏற்பட்டு தொடரில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
உலக பெண்கள் டென்னிஸ் பிரிவில் முக்கிய ஒருவராக சானியா மிர்சா இடம் பெற்றுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை,இதுவரை ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்கள் வென்றுள்ளார்.ஒரு முறை உலக ஒற்றையர் பிரிவில் 27-வது இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சானியா மிர்சாவின் தனது ஓய்வு குறித்து கேட்ட பொழுது அவர் கூறியது,எனக்கு 36 வயதாகி விட்டது எனது உடல் மட்டும் மனம் ரீதியாக நான் ஓய்வு பெற தயாராகி விட்டேன் இது தான் நான் ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் என்று கூறினார்.
சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்த பிறகு துபாய் சென்று பல வருடங்களாக அங்கு தான் வாழ்ந்து வருகிறார் எனவே, துபாயில் நடக்கும் தொடரே சானியாவின் கடைசி தொடராகவும் அமைந்துள்ளது என்று தங்களின் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.