ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி சோகத்தில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் ரபேல் நடால் இரண்டாவது சுற்றில் அமெரிக்கா வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார், தனது அடுத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் தோல்வியுற்று வெளியேறினார்.
மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற உலகின் தலை சிறந்த வீரர் ரபேல் நடால் உலகில் 65-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த வீரர் மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் இரண்டாவது சுற்றில் மோதினார்.இந்த சுற்றில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது அதையும் பொருட்படுத்தாமல் விளையாடினார் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்.
இந்த சுற்றில் காயத்தினால் மிகவும் அவதிப்பட்ட நடால் 4-6, 4-6, 5-7 என்ற நிலையில் அமெரிக்கா வீரரிடம் தோல்வியை தழுவி வெளியேறினார்,கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு தொடரில் இரண்டாவது சுற்றிலேயே தொடரை விட்டு நடால் வெளியேறுவது இப்பொழுது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ரபேல் நடால்,இந்த முறை தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறுவது ரசிகர்ளுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது, இந்த முறையும் ஆஸ்திரேலியா ஓபன் தொடரை வென்று தனது 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ரபேல் நடால் சமீப காலமாக தொடர்ந்து பல காயங்களால் அவதிப்பட்டு வருவதால் அவர் முழுமையாக குணமாகி நலமுடன் திரும்பி வரவேண்டும் என்று ரசிகர்கள் தங்களின் ஆதரவை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.