வீரர், வீராங்கனைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள்…! தமிழகத்தில் யாருக்குத் தெரியுமா..?

விளையாட்டுத்துறையில் தேசிய விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில், தமிழக வீரர், வீராங்கனைகள் விருது வாங்குவதற்கான அறிவிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், விளையாட்டுத் துறையில் தேசிய விருது பெறும் சிறந்த வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர் மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா விருது, சிறந்த செயல் திறனுக்கு வழங்கப்படும் அர்ஜீனா விருது, சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருதான துரோணாச்சாரியார் விருது, வாழ்நாள் சாதனைக்கு வழங்கப்படும் “தயான் சந்த் விருது” போன்றவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், இந்த 2022 ஆம் ஆண்டின் நாட்டுக்கான மிக உயரிய விளையாட்டு விருதான “மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது” பிரபல டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் அசந்தாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதே போல, 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த அர்ஜீனா விருது வாங்குபவர்களின் பட்டியலில் தமிழகத்தில் இருந்து இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், செஸ் வீரரான பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக விளங்கும் இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கு மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அர்ஜூனா விருதை வழங்க உள்ளது.
மேலும், தடகள வீராங்கனை சீமா புனியா, பேட்மின்டன் விளையாட்டு வீரர் லக்ஷயா சென், பாரா பேட்மின்டன் வீராங்கனையான மானசி போன்றோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருதான,”துரோணாச்சார்யா விருது” வழக்கமாக 4 பயிற்சியாளர்களுக்கும், வாழ்நாள் பிரிவில் 3 பேருக்கும் என மொத்தம் 7 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், தயான் சந்த் விருதான வாழ்நாள் சோதனைக்காக வழங்கப்படும் விருதாகும். இந்த விருது 4 பேருக்கும், ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புருஸ்கார் விருது 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.