தமிழ்நாட்டை சேர்ந்த 16-வயது சிறுவன் இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்..!

தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிரானேஷ் என்ற 16-வயது சிறுவன் எப்.ஐ.டி.இ சர்க்யூட்டின் முதல் போட்டியான ரில்டன் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இந்தியாவின் 79- கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
ஒரு செஸ் பிளேயர் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கு,முதலில் மூன்று கிராண்ட் மாஸ்டர் தேர்வு விதிமுறைகளை பெற்றிருக்க வேண்டும் ,அதன்பின் 2500 எலோ புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடந்த ரில்டன் கோப்பையில் பிரானேஷ் 8-போட்டிகளில் முழு புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டருக்கான அனைத்து நிலைகளையும் கடந்தது தேர்வு பெற்றதால் இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டராக அங்கீகரிக்க பட்டார்.
இந்த ரில்டன் கோப்பை தொடரில் 29 தேசிய கூட்டமைப்புகளை சேர்ந்த 136 பிளேயர்கள் கலந்து கொண்டார்கள்,மேலும் இந்தியாவை சேர்ந்த மற்றொரு கிராண்ட் மாஸ்டரான ஆர்.ராஜா ரித்விக் இந்த தொடரில் 6 புள்ளிகளை பெற்று 8-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பிரானேஷ் ஸ்டாக்ஹோமில் நடந்த இந்த தொடரில் எட்டு ஆட்டங்களில் வென்று, ஐஎம் கான் குசுக்ஸாரி (ஸ்வீடன்) மற்றும் ஜிஎம் நிகிதா மெஷ்கோவ்ஸ் (லாத்வியா) ஆகியோரை விட முன்னிலை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு எம்.பிரானேஷ் இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர் ஆனதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.