இந்திய டேக்வான்டோ கூட்டமைப்பின் தலைவர் தேர்தலில் ஐசரி கணேஷ் வெற்றி!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 14, 2022 & 17:15 [IST]

Share

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் வெற்றி பெற்றுள்ளார். 

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான நிர்வாகிகள் தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக தற்போது இருந்து வரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான ஐசரி கணேஷ் போட்டியிட்டார். 

ஐசரி கணேஷ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத்த்தை சேர்ந்த சஞ்சய் சுப்ரியாவை வீழ்த்தி, தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளார்.

இந்த தேர்தலில் ஐசரி கணேஷுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்ரியாவுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர். மேலும் ஐசரி கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.