தோனிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
![தோனிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து](https://www.sportspartans.com/assets/uploads/news-2343.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது 18 வயதில் (1999-2000) ரஞ்சி தொடரில் களமிறங்கினார். கிரிகெட்டின் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்று தந்த ஒரே கேப்டன் இவர் தான். தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை தன்வசமாக்கியுள்ளார்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர தல என்று அழைக்கப்படும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சாதாரண பின்னணி குடும்பத்தில் இருந்து வந்த உங்களது சாதனையும், பண்பும் இந்திய இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஈடுஇணையற்ற உங்களது தலைமை பண்பு பலரை மேலும் கவர்ந்து தொடர்ந்து தாங்கள் ஜொலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.