3 மணி நேரத்தில் 3 லட்சம் டவுன்லோடுகள்.. தோனிக்கு நன்றி கூறிய கேண்டி க்ரிஷ் கேம் நிறுவனம்! | Candy Crush Saga

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியால் கேண்டி க்ரஷ் சாகா என்ற வீடியோ கேம் பிரபலமாகி உள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவதற்காக ஆரம்பகட்ட பணியை தற்போதே எடுத்துவிட்டார். மும்பையில் உடனடியாக தனது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி தற்போது உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தோனி விமானத்தில் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தோனியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள். அவரை வரவேற்கும் விதமாக நிறைய சாக்லேட்டுகளை பரிசாக அவருக்கு வழங்கினர். இதனைப் பார்த்ததும் ஆச்சரியம் அடைந்த தோனி, தமக்கு இவ்வளவு சாக்லேட் வேண்டாம் என்றும் உங்களுடைய அன்பிற்காக ஒரு சாக்லேட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிக்கொண்டு மற்ற சாக்லேட்டுகளை விமான பணிப்பெண்ணிடம் வழங்கினார்.
அப்போது தோனி தன்னுடைய ஐபேடில் கேண்டி க்ரஷ் வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருந்தார். இது விமான பணிப்பெண் எடுத்த வீடியோவில் பதிவானது. இதனைப் பார்த்ததும் நம்ம தல தோனி இந்த வீடியோ கேம் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று அதனை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் செய்தனர். மேலும் பலரும் மீண்டும் கேண்டி கிரஷ் வீடியோ கேமை டவுன்லோட் செய்து இருக்கிறார்கள்.
இதன் காரணமாக 3 மணி நேரத்தில் 36 லட்சம் பேர் கேண்டி க்ரஷ் வீடியோ கேமை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். இதனை சமூக வலைத்தளத்தில் கேண்டி க்ரஷ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. தோனி விளையாடியதாலேயே தங்கள் பக்கம் மீண்டும் மக்கள் வந்திருப்பதாக அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.