கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன்.. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் லக்சயா சென்..

கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடாவிலுள்ள கல்காரி நகரில் கனடா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றார்.
காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை பாங் ஜீ என்பவரை எதிர்கொண்ட சிந்து 21-13, 21-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த சீசனில் பெரிதாக வெற்றியை குவிக்காத பிவி சிந்து இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் பி.வி.சிந்து, முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் மோதுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியிடம் 14-21, 15-21 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார்.
இது ஒரு பக்கமிருக்க, இந்திய வீரரான லக்ஷயா சென் தனது அரையிறுதி போட்டியில், ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் கர்ராகி என்பவரை 21-8, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோ என்பவரையும் தோற்கடித்து அவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் லக்சயா சென், சீனாவின் லி ஷி பெங்கை எதிர் கொண்டார். மொத்தம் 50 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய லக்சயா சென், 21-18 என்ற செட் கணக்கில் முதல் சுற்றை தன் வசப்படுத்தினார்.
தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், 22 க்கு 20 எனும் கணக்கில் வெற்றி பெற சாம்பியன் பட்டம் லக்ஷயா சென் வசமானது. பேட்மிட்டன் உலக கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியில், லக்ஷயா சென் வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும்.