உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வெளியானது..!! முக்கிய வீரர் இடம்பிடித்தார்.!! | wtc final match 2023 india squad

உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதிப் போட்டியானது இங்கிலாந்து மண்ணில் வரும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த முக்கிய போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ தலைமையில் ஆன தேர்வு குழு அறிவித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய தொடராக விளங்கும் டெஸ்ட் தொடரை சிறப்பு படுத்தும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டு 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்த 2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் தேர்வாகி உள்ளது. இந்த இரு அணிகளும் வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கிய டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அண்மையில் வெளியான நிலையில், இதில் கடத்த 2022 ஆம் ஆண்டு முதல் அணியில் இடம் பெறாமல் இருந்த முன்னணி வீரர் அஜிங்கியா ரஹானே இடம்பிடித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் மீண்டும் அணியில் இணைந்து அசத்தியுள்ளார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஹானே அசத்தி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணி :
1) ரோஹித் சர்மா (கேப்டன்)
2) ஷுப்மான் கில்
3) செதேஷ்வர் புஜாரா
4) விராட் கோலி
5) அஜிங்கியா ரஹானே
6) கே எல் ராகுல்
7) கே எஸ் பாரத் (வி.கீ)
8) ரவிச்சந்திரன் அஷ்வின்
9) ரவீந்திர ஜடேஜா
10) அக்சர் படேல்
11) ஷர்துல் தாக்கூர்
12) முகமது ஷமி
13) முகமது சிராஜ்
14) உமேஷ் யாதவ்
15) ஜெய்தேவ் உனத்கட்