WPL 2023 : முதல் முறையாக ஆரம்பமாகும் மகளிர் பிரீமியர் லீக் தொடர்..!! முதல் போட்டி குறித்த விவரங்கள் ஒரு பார்வை..!!

உலக அளவில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டை ஆதரிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய மண்ணில் மகளிர் கிரிக்கெட்டிற்கான ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு பிசிசிஐ நிர்வாகம் சார்பில் முதல் முறையாக நடத்த உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான ஏலம் மற்றும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் உள்ளிட்டவை சிறப்பாக சமீபத்தில் முடிந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் அடுத்த மைல்கல்லை எட்டும் வகையில் மகளிர் ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 4ஆம் தேதி) மும்பையில் தொடங்க உள்ளது.
இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெற உள்ள மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க 5 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை முறையே
1) மும்பை இந்தியன்ஸ்
2) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
3) டெல்லி கேபிடல்ஸ்
4) குஜராத் ஜெயண்ட்ஸ்
5) உ.பி.வாரியர்ஸ்
இந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள முதல் மகளிர் ஐபிஎல் தொடரில் 5 அணிகளும் மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் வரும் மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை 22 போட்டிகளில் விளையாட உள்ளது, குறிப்பாக 20 லீக் சுற்றுகள் மற்றும் 2 நாக் அவுட் சுற்றுகள் நடைபெற உள்ளது.இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி விவரம் :
போட்டி : குஜராத் ஜெயின்ட்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் முதல் லீக் போட்டி
நேரம் : 7:30 P.M (IST)
நாள் : சனிக்கிழமை
மைதானம் : டி.ஒய். பாட்டீல் மைதானம், மும்பை.
ஒளிபரப்பு தளம் : ஸ்போர்ட்ஸ் 18 & ஜியோ சினிமா ஆப்.
குஜராத் ஜெயின்ட்ஸ் அணி : ஆஷ் கார்ட்னர், சினே ராணா, பெத் மூனி (கேப்டன்), ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், சோபியா டன்க்லி, டியாண்ட்ரா டாட்டின், ஹர்லி காலா, சுஷ்மா வர்மா, தனுஜா கன்வர், ஹர்லீன் டியோல்,அஸ்வினி குமாரி, எஸ் மேனகா, மான்சி ஜோஷி, டி ஹேமலதா, மோனிகா படேல், பர்ணிகா சிசோடியா, ஷப்னம் ஷகில்.
மும்பை இந்தியன்ஸ் அணி : ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), நடாலி ஸ்கிவர், அமெலியா கெர், பூஜா வஸ்த்ர கர், யஸ்திகா பாட்டியா, ஹீதர் கிரஹாம், இசபெல் வோங், அமன்ஜோத் கவுர், தாரா குஜ்ஜார், சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ், சோலி ட்ரைன், ஹுமைரா காசி, பிரியங்கா பாலா,சோனம் யாதவ், ஜிந்தாமணி கலிதா, நீலம் பிஷ்ட்.