உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்..! இறுதிப் போட்டிக்கு அருகில் இந்திய அணி..?

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான 2-டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் புள்ளிகள் அடிப்படையில் முன்னதாக முதல் நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா,தென்னாபிரிக்கா,இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முறையே இருந்தன.இந்நிலையில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது அடுத்து வரும் அணிகளின் போட்டிகள் முடிவில் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை அடுத்து நடந்த போட்டிகளில் இந்திய அணி வங்கதேசதிற்கு எதிரான 2-டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும்தென்னாபிரிக்கா அணிகள் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இதனால் தற்பொழுது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,ஆஸ்திரேலியா அணி தனது தொடர்ச்சியான வெற்றியின் மூலம் 76.92% வெற்றி சதவீதத்துடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் வெற்றி சதவீதம் 58.93% அதிகரித்து தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
தென்னாபிரிக்கா அணி 54.55 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது,மேலும் தென்னாபிரிக்கா அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2-டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணி அடுத்தாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4- டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது,இந்த போட்டிகளில் முடிவில் தான் எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற உறுதியான முடிவு வெளிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணியின் வெற்றி சதவீதத்தை பார்க்கும் பொழுது கண்டிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி விடும் என்று தெரிகிறது,ஆனால் இரண்டாவது இடத்திற்கு தென்னாபிரிக்கா அணி அல்லது இந்தியா அணி இரண்டில் டெஸ்ட் வரும் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது தான் உண்மை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவிருக்கிறது என்ற நிலையில் கண்டிப்பாக இந்த மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணி புதிய உலக டெஸ்ட் சாமிபோன்ஷிப் பட்டத்தை வெல்லும் என்பது மட்டும் உறுதி.கடந்த முறை இழந்த வாய்ப்பை இந்த முறை சரியாகப் பயன்படுத்தி இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்றும் இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.