WPL AUCTION 2023: மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் தொடங்கியது..!! ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஏலத்தில் முதலில் விற்கப்பட்டனர்..!!

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் அணிகள் விளையாடும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு முதல் நடத்த பிசிசிஐ முடிவு செய்த நிலையில், இன்று அணிகளுக்கு ஏலம் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கில் விளையாடும் 5 அணிகளும் போட்டி போட்டு கொண்டு பிளேயர்களை தங்கள் அணிக்கு வாங்கி வருகிறார்கள்.
இன்று மும்பையில் தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகளின் உரிமையாளர்கள் ஏலத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த ஏலத்தில் 446 பிளேயர்கள் கலந்துகொள்ள தேர்வாகி உள்ள நிலையில், மொத்தமாக அனைத்து அணிகளையும் சேர்ந்து 90 இந்திய பிளேயர்கள் மற்றும் 30 வெளிநாட்டு பிளேயர்கள் ஏலத்தில் விற்கப்பட உள்ளனர். மேலும் ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 முதல் 18 பிளேயர்கள் வரையில் ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஏலத்தில் முதல் பிளேயராக இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3.4கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் வாங்கப்பட்டார், மேலும் நியூசிலாந்து அணியின் வீராங்கனை சோஃபி டேவின் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி ஆகியோரும் பெங்களூரு அணியில் இடம் பெற்றனர்.
அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 1.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.மேலும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் 3.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட்டார், இறுதியாக ஏலத்தின் முதல் சுற்று முடிவில் யுபி வாரியர்ஸ் அணி சார்பில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சோஃபி எக்லெஸ்டோன் 1.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.
முதல் முறையாக நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் முதல் சுற்றிலேயே தங்கள் அணிக்கு பிளேயர்களை வாங்க அணியின் நிர்வாகத்தினர் தீவிரமாக போட்டி போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.