WOMEN IPL AUCTION 2023 : மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அதிக விலைக்கு போன பிளேயர்கள் பட்டியல் ஒரு பார்வை :

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த ஆண்டு முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏலம் மும்பையில் நேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போன பிளேயர்களை விபரங்களை காண்போம்.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் முதல் முறையாக இந்தியாவின் பிரபலமான உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரை மகளிர் அணிக்காகவும் நடத்த முடிவு செய்யப்பட்டது, இந்த தொடரில் பங்கேற்க 5 அணிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டது அவை முறையே
- மும்பை இந்தியன்ஸ்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
- டெல்லி கேப்பிடல்ஸ்
- யுபி வாரியர்ஸ்
- குஜராத் ஜெயண்ட்ஸ்
அதன் பின் அந்த அணிகளுக்கு வீரர்களை வாங்கும் ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்ற நிலையில் அனைத்து அணிகளும் போட்டி போட்டு கொண்டு பிளேயர்களை தங்கள் அணிக்காக வாங்கினார்கள்.இந்த ஏலத்தில் குறிப்பாக இந்திய வீராங்கனைகள் பலர் அதிக விலைக்கு அணி நிர்வாகத்தினரால் வாங்கப்பட்டனர்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக விலைக்கு போன வீராங்கனைகள் விவரங்கள் :
எண் |
பிளேயர் |
அணி |
நாடு |
விலை |
ரோல் |
1 |
ஸ்மிருதி மந்தனா |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
இந்தியா |
3.4 கோடி |
பேட்ஸ்மேன் |
2 |
ஆஷ்லே கார்ட்னர் |
குஜராத் ஜெயிண்ட்ஸ் |
ஆஸ்திரேலியா |
3.4 கோடி |
ஆல்ரவுண்டர் |
3 |
நாட் ஸ்கிவர்-பிரண்ட் |
மும்பை இந்தியன்ஸ் |
இங்கிலாந்து |
3.2 கோடி |
ஆல்ரவுண்டர் |
4 |
தீப்தி ஷர்மா |
யுபி வாரியர்ஸ் |
இந்தியா |
2.6 கோடி |
ஆல்ரவுண்டர் |
5 |
ஜெமிமா ரோட்ரிக்ஸ் |
டெல்லி கேப்பிடல்ஸ் |
இந்தியா |
2.2 கோடி |
பேட்ஸ்மேன் |
6 |
பெத் மூனி |
குஜராத் ஜெயின்ட்ஸ் |
ஆஸ்திரேலியா |
2 கோடி |
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் |
7 |
ஷஃபாலி வர்மா |
டெல்லி கேப்பிடல்ஸ் |
இந்தியா |
2 கோடி |
ஆல்ரவுண்டர் |
8 |
பூஜா வஸ்த்ரகர் |
மும்பை இந்தியன்ஸ் |
இந்தியா |
1.9 கோடி |
ஆல்ரவுண்டர் |
9 |
ரிச்சா கோஷ் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
இந்தியா |
1.9 கோடி |
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் |
10 |
ஹர்மன்ப்ரீத் கவுர் |
மும்பை இந்தியன்ஸ் |
இந்தியா |
1.8 கோடி |
ஆல்ரவுண்டர் |