இலங்கை அணியை துவம்சம் செய்த நியூசிலாந்து…!! வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் அதிரடி..!!

நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியை நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிதறடித்து துவம்சம் செய்து உள்ளார்கள் .
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடி வருகிறார்கள் , இதில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியில் முக்கியமான தருணத்தில் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் சதம் அடித்து நியூசிலாந்து அணிக்கு அசத்தல் வெற்றியை பெற்று தந்தார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதியை இழந்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது 2வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெல்லிங்டன் மைதானத்தில் விளையாடி வருகிறார்கள், இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இலங்கை அணியின் பவுலிங்கை வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் இருவரும் சிதறடித்து இரட்டை சதம் அடித்து அசத்தினார்கள், குறிப்பாக வில்லியம்சன் 215 (296) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஹென்றி நிக்கோல்ஸ் 200*(240) ரன்கள் பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 540 ரன்கள் பதிவு செய்து டிக்ளேர் செய்தது.
ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் ஒரே இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அசத்திய நிலையில், இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 2 விக்கெட் இழந்து 26 ரன்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.