ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் …!! | rcb player ipl 2023 news

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது, அதாவது இந்த தொடரில் இருந்து பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வெளிநாட்டு வீரர் விலகியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்களை கொண்டுள்ள மிகவும் முக்கியமான அணிகளில் ஒன்றாக விளங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் வீரர் வில் ஜாக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். ஐபிஎல் மினி ஏலத்தில் 3.2 கோடிக்கு பெங்களூர் அணி சார்பில் வாங்கப்பட்ட வில் ஜாக்ஸ் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருந்த நிலையில் விலகியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 24 வயது இளம் பேட்டிங் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கி 6 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20 தொடர்களில் இதுவரை சுமார் 2800 ரன்கள் பதிவு செய்துள்ள நிலையில் ஏலத்தில் பெங்களூர் அணியில் சார்பில் வாங்கப்பட்டார்.
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் விளையாடிய போது காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிந்துரையின் பெயரில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வில் ஜாக்ஸ் இடத்திற்கு நியூசிலாந்து அணியை சேர்ந்த மைக்கேல் பிரேஸ்வெல் சரியாக இருப்பார் என்பதால், அவரை அணியில் இடம் பெற வைக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 2023 ஆம் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஏப்ரல் 1 ஆம் தேதி பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.