மக்களின் கவனத்தை ஈர்த்த காவ்யா மாறன் யார்? | Who is Kavya Maran

ஐபிஎல் 2023 தொடரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்த காவ்யா மாறன் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
யார் இந்த காவ்யா மாறன்?
ஐபிஎல் 2023 தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் சொந்தக்காரர் தான் காவ்யா மாறன். இவர் கலாநிதி மாறன் அவர்களின் மகள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தியாவர். தமிழகத்தின் மிக முக்கிய குடும்பத்தில் பிறந்து காவ்யா மாறன் நியூயார்க்கில் உள்ள லியோனார்ட் என் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படிப்பு முடித்துள்ளார். படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய தாய் மற்றும் தந்தையின் பிசினஸை கவனித்துக்கொள்ள தமிழகம் வந்தடைந்தார்.
எதனால் மக்கள் இவரை கவனிக்கின்றனர்?
கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவராம் காவ்யா மாறன். எனவே, ஐபிஎல்-லில் SRH அணியின் உரிமையாளராக பல போட்டியில் கலந்து வீரர்களை உற்சாகப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவரை மக்கள் கவனிக்க தவறி விட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் ஹைதெராபாத் அணி முதல் வெற்றியைப் பதித்துள்ளது. அந்தப் போட்டியில் தன்னுடைய குழந்தைத்தனமான நடவடிக்கைகளால் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளார்.
அவர் தன்னுடைய அணி விளையாடும் போது செய்த சின்ன சின்ன சேட்டைகளின் காட்சிகள் தற்போது பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் காவ்யா மாறன் யார் என்று தேடி வருகின்றனர். இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பாராம். தற்போது வரை இந்த விஷயங்கள் தான் வெளியாகியுள்ளது.