உம்ரான் மாலிக்கிற்கு ஜாக்பாட்.. ஹர்திக் பாண்டியா கொடுத்த ஹிண்ட்.. இனி வேற மாறி!!

Representative Image. Representative Image.

By Sekar Published: January 02, 2023 & 18:55 [IST]

Share

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு அணி நிர்வாகம் போதுமான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்கும் என்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

உம்ரான் மாலிக் 2022 இல் ஒரு திருப்புமுனை ஆண்டைக் கொண்டிருந்தார். இந்த ஆண்டில் தான் அவர் ஐபிஎல்லில் மிகச் சிறந்த பெர்பார்மன்ஸை காட்டி அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும், அவரது சர்வதேச என்ட்ரி நல்ல தொடக்கத்தை பெறவில்லை. ஆனால் எதிர்கால இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 

தற்போது இலங்கைக்கு எதிரான தொடருக்கான அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். மாலிக் பிளேயிங் 11'இல் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக பேசிய பாண்டியா, அணி நிர்வாகம் மாலிக்கிற்கு போதுமான வாய்ப்புகளையும் ஆதரவையும் தருவதாக கூறினார்.

"வெளிப்படையாக கூறுவதென்றால், அவருக்கு வேகம் உள்ளது. அவர் எவ்வளவு உற்சாகமான வாய்ப்புள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு நாங்கள் போதுமான வாய்ப்புகளை வழங்குவோம். அவருக்கு போதுமான ஆதரவை வழங்குவோம்." என்று பாண்டியா கூறினார்.

இதனால், இனி வரும் காலங்களில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் நிரந்தரமான இடம் உண்டு என எதிர்பார்க்கப்படுகிறது.