விராட் கோலி மற்றும் கங்குலி இடையில் சூடு பிடித்த மோதல்..!! குழப்பத்தில் ரசிகர்கள்..!! | virat kohli vs dc ganguly issue

ஐபிஎல் 2023 அரங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி இயக்குனர் சௌரவ் கங்குலி இடையில் பார்வையில் காரசார மோதல் ஏற்பட்டது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சௌரவ் கங்குலி பிசிசிஐ முன்னாள் தலைவராக பதவி வகித்த போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த முன்னணி வீரர் விராட் கோலி பதவியில் இருந்து விலகினார். அந்த பிரச்சனை சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது, குறிப்பாக கேப்டன்சி விவகாரத்தில் விராட் கோலி மற்றும் கங்குலி இடையில் கருத்து மோதல் இருந்தாக தகவல் வெளியானது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி முன்னணி வீரர் விராட் கோலி அரைசதம் பதிவு செய்து அசத்தினார். அந்த நேரத்தில் விராட் கோலி ஆக்ரோஷமாக அனைவர் முன்னிலையில் பெவிலியன் நோக்கி கொண்டாடினார், அப்போது சின்னசாமி அரங்கமே அதிர்ந்தது. அதன்பின் பெங்களூர் அணி பவுலிங் செய்த போது பவுண்டரி அருகில் இருந்த விராட் கோலி ஒரு கேட்ச் பிடித்து விட்டு டெல்லி அணி பெவிலியனில் அமர்ந்திருந்த கங்குலி நோக்கி ஆக்ரோஷமாக பார்வை ஒன்றை அளித்தார்.
இந்த சம்பவங்கள் நடைபெற்ற பின்,போட்டியின் இறுதியில் விராட் கோலி இடம் கங்குலி கைகுலுக்க மறுத்து விட்டார். இதன்மூலம் கங்குலி மற்றும் கோலி இடையில் இருக்கும் பிரச்சனையை உறுதியானது. தற்போது இதனை அடுத்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சௌரவ் கங்குலி பின் தொடர வில்லை, இது இணையத்தில் பரவி வரும் நிலையில் இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகரித்துள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.