ஐபிஎல் அரங்கில் ஆர்சிபி வீரர் விராட் கோலி பதிவு மகத்தான முக்கிய சாதனை..!! | virat kohli unique record for rcb

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் முன்னணி வீரர் விராட் கோலி முக்கிய அசத்தல் சாதனை படைத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய விராட் கோலி அரைசதம் பதிவு செய்து அசத்தினார், குறிப்பாக 54(37) ரன்கள் பதிவு செய்தார்.
இந்த போட்டியில் விராட் கோலி புதிய மைல்கல்லை அடைந்து உள்ளார், அதாவது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, பெங்களூர் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன சின்னசாமி மைதானத்தில் பல அதிரடி ஆட்டங்கள் அரங்கேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று சின்னசாமி மைதானத்தில் விளையாடிய போட்டியில் விராட் கோலி ஒரே மைதானத்தில் 3000 ரன்களுக்கு மேல் பதிவு செய்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார். மேலும் இதுவரை சின்னசாமி மைதானத்தில் 92 இன்னிங்ஸில் 3015 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிரடியாக விளையாடி வரும் முன்னணி வீரர் விராட் கோலி 8 போட்டிகளில் 5 அரைசதம் உட்பட 333 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.