IND VS AUS TEST 2023 : சர்வதேச அரங்கில் விராட் கோலி மாபெரும் சாதனை…!! சச்சின், பாண்டிங் ஆகியோரை கடந்து முன்னிலை..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடைய மாபெரும் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம் பிடித்தார்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்திய நிலையில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியும் சர்வதேச அளவில் புதிய மைல்கல்லை அடைத்து இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தார்.
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 52 ரன்கள் பெற்றால் சர்வதேச அளவில் 25000 ரன்கள் பெற்று மிகப்பெரிய மைல்கல்லை அடைந்து மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பிருந்தது, இந்நிலையில் தனது சொந்த மண்ணான டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் கோலி 25000 சர்வதேச ரன்கள் பெற்றார். இந்த மைல்கல்லை விராட் கோலி அடைந்ததன் வேகமாக 25000 சர்வதேச ரன்கள் பெற்ற வீரர் என்ற பெருமையை அடைந்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் உடைய மாபெரும் சாதனையை முறியடித்தார்.
அதாவது சர்வதேச அளவில் சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார், ஆனால் விராட் கோலி 549 இன்னிங்சில் 25000 ரன்கள் பதிவு செய்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கர் உடைய சாதனையை முறியடித்து அசத்தினார். மேலும் இந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் (588), ஜாக் காலிஸ் (594) ,சங்கக்கார (608), மஹேல ஜெயவர்த்தனே (701) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்து 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 3வது டெஸ்ட் போட்டி இந்தோரில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.