உலகிலேயே அதிக தேடப்படும் வீரர்களில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த விராட் கோலி... விளையாட்டு மட்டுமில்லாமல் இணையத்தையும் ஆட்சி செய்வதாக கிங் கோலிக்கு குவியும் பாராட்டு...
![உலகிலேயே அதிக தேடப்படும் வீரர்களில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த விராட் கோலி... விளையாட்டு மட்டுமில்லாமல் இணையத்தையும் ஆட்சி செய்வதாக கிங் கோலிக்கு குவியும் பாராட்டு...](https://www.sportspartans.com/assets/uploads/news-2358.jpg)
சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் வீரர்களில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் மோகம் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் மீதான வணிகமும், கிரிக்கெட் வீரர்களின் விளம்பர மதிப்பும் பல நூறு கோடிகளை தாண்டி வருகிறது.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் ஃபார்முக்கு வந்த விராட் கோலியின் விளம்பர சந்தை மதிப்பு ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ.1,050 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிசிசிஐ ஒப்பந்தம், ஐபிஎல் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை கடந்து விராட் கோலியின் ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு அதிக வருமானம் பெறுகிறார்.
ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்காக விராட் கோலி ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டுகிறார். அதேபோல் ஒரேயொரு ட்விட்டர் பதிவிற்காக ரூ.2.5 கோடி வருமானத்தை பெறுகிறார். அதேபோல் மும்பையில் ரூ.34 கோடியில் ஒரு வீடும், குருகிராமில் ரூ.80 கோடியில் ஒரு வீடும் விராட் கோலி கட்டியுள்ளார். அதேபோல் ரூ.31 கோடிக்கு அதிக விலையுயர்ந்த ஏராளமான கார்களை வாங்கி விராட் கோலி குவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், எம்ஆர்எஃப், ஊபர், மிந்த்ரா, வீவோ, அமெரிக்கன் டூரிஸ்டர், நாய்ஸ், சிந்தால், வாலினி உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் விளம்பர தூதராக செயல்படுவதன் மூலம் விராட் கோலி ஒரு நாளில் மட்டும் ரூ.7.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். இப்படி விளையாட்டிலும், வியாபாரத்திலும் ஜாம்பவானாக விராட் கோலி திகழ்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அவரை ரசிப்பவர்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இதன் சாட்சியாக சமீபத்தில் கூகுள் விக்கிபீடியாவில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் விராட் கோலி இருப்பது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு வீரர்கள் மத்தியில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு, வியாபாரம் மட்டும் இல்லாமல் சமூக வலைதளத்தையும் ஆக்கிரமித்து இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.