IND VS AUS TEST 2023 : டெஸ்ட் அரங்கில் கோலி, ரோகித் புதிய சாதனை..!! இளம் வீரர் கில் சதம் விளாசல்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது , இதையடுத்து இந்திய வீரர்கள் ரோகித், கில், கோலி புதிய மைல்கல்லை அடைந்து அசத்தினார்.
இந்த 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அளித்த இமாலய இலக்கை அடைய பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், இதன்மூலம் இந்திய அணி வீரர்கள் பல புதிய சாதனைகளை டெஸ்ட் அரங்கில் படைத்தார்கள்.
ரோஹித் சர்மாவின் சாதனை :
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 35(58) ரன்கள் பெற்று ஆட்டமிழந்தார், ஆனால் இந்த ரன்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 17000 ரன்கள் பெற்ற 6வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார். இந்த சிறப்பு மிகு பட்டியலில்
1) மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்- 34,357 ரன்கள் (664 போட்டிகள்)
2) விராட் கோலி - 25,047 ரன்கள் (494 போட்டிகள் )
3) ராகுல் டிராவிட் - 24,064 ரன்கள் (504 போட்டிகள்)
4) சவுரவ் கங்குலி - 18,433 ரன்கள் (421 போட்டிகள் )
5) தோனி - 17,092 ரன்கள் (535 போட்டிகள் )
6) ரோஹித் சர்மா - 17,000* ரன்கள் (438 போட்டிகள்)
ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா 6 வது வீரராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கில் கலக்கல் சாதனை :
அதன்பின் இதே போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில், ஒரே ஆண்டில் 3 வித கிரிக்கெட் தொடர்களில் சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை அடித்தார்.அதற்கு முன் இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா , சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய மூவர் மட்டும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து கில் 128(35) இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி உடைய சாதனை :
இந்த 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்தில் அரைசதம் கடந்து இந்திய அணியின் நம்பிக்கையாக ஆட்டமிழக்காமல் இருக்கும் முன்னணி வீரர் விராட் கோலி 59*(128) புதிய சாதனை படைத்து உள்ளார். இந்த போட்டியில் விராட் கோலி 42 ரன்கள் பெற்ற போது இந்திய மண்ணில் டெஸ்ட் அரங்கில் 4000 ரன்கள் பெற்ற 5 வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் குறைந்த இன்னிங்சில் 4000 ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் வீரேந்தர் சேவாக் (71 இன்னிங்சில் )மற்றும் சச்சின் டெண்டுல்கர் (78 இன்னிங்சில் ) உள்ள நிலையில், தற்போது விராட் கோலி மூன்றாவது வீரராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் இந்திய அணி 4 வது டெஸ்ட் போட்டியின் 3 வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் பெற்றுள்ளது, மேலும் களத்தில் விராட் கோலி 59*(128) ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 16*(54) ரன்களுடனும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.