IND VS AUS TEST 2023 : சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி..!! 28 வது டெஸ்ட் சதம் விளாசி அசத்தல்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 28 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் அதிரடியால் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் 3வது நாள் முடிவில் அரைசதம் அடித்து இந்திய அணி சார்பில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி, இன்று நடைபெற்ற 4வது நாள் ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடி விராட் கோலி டெஸ்ட் அரங்கில் 3 ஆண்டுகள் கழித்து 28 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இது சர்வதேச அரங்கில் விராட் கோலி உடைய 75 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் உடைய சாதனையை முறியடித்துள்ளார், அதாவது சச்சின் தனது 75 வது சர்வதேச சதத்தை 566 இன்னிங்சில் பதிவு செய்த நிலையில், தற்போது விராட் கோலி 552 இன்னிங்ஸில் தனது 75 வது சர்வதேச சதத்தை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விராட் கோலி உடைய 8 வது டெஸ்ட் சதம் ஆகும், இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர் உடன் 2வது இடத்தை விராட் கோலி பகிர்ந்து கொள்கிறார். இந்த சிறப்பு மிகு பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 11 சதம் பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் விராட் கோலி உடைய 50 வது டெஸ்ட் போட்டியாக இருந்த நிலையில், அதில் சதம் அடித்து விராட் கோலி அசத்தியுள்ளார். இதே போல் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் 1983 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் தனது 50 வது டெஸ்ட் போட்டியில் 4வது இடத்தில் விளையாடிய போது சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் போட்டியில் இறுதிவரை இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய விராட் கோலி 186(364) ரன்கள் பெற்று அசத்தினார், இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் பதிவு செய்து ஆஸ்திரேலியா அணியின் 480 ரன்கள் இலக்கை கடந்து 91 ரன்கள் முன்னிலை பெற்றதற்கு முக்கிய காரணமாக விராட் கோலி இருந்தார் என்று கூறினால் மிகையில்லை.