பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான விராட் கோலி பதிவு செய்த முக்கிய சாதனை..!! | virat kohli record vs pbks in 2023

ஐபிஎல் அரங்கில் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பெங்களூரு அணிக்காக நீண்ட நாட்கள் கழித்து கேப்டனாக செயல்பட்ட முன்னணி வீரர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அணியின் வெற்றிக்கு உதவியது மட்டுமல்லாமல், பல சாதனைகளையும் படைத்து அசத்தினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் பாப் டு பிளெசிஸ் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இம்பாக்ட் பிளேயராக செயல்பட்டதால், அவருக்கு பதில் கேப்டனாக பெங்களூரு அணியை முன்னணி வீரர் விராட் கோலி வழி நடத்தினார். இந்த போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது 48 வது அரை சதத்தை பதிவு செய்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலர்களை சிதறடித்த விராட் கோலி 59(47) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் பெங்களூரு அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற்று தந்த நிலையில், பல சாதனைகளை படைத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் வேகமாக 6500 ரன்கள் பதிவு செய்த முதல் கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். மேலும் ஐபிஎல் தொடரில் 600 பவுண்டரிகள் பதிவு செய்த 3 வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி பதிவு செய்தார், இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் உள்ளனர் .
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி பெற்று தந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 6 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.