ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி பல சாதனைகளை படைக்க வாய்ப்பு..!! | kohli new odi records 2023

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி பல புதிய சாதனைகள் படைக்க வாய்ப்பு உள்ளது, இந்திய அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான பார்மில் இருக்கும் விராட் கோலி இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி 186 ரன்கள் பதிவு செய்து, 3 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் சதம் அடிக்காத குறையை தீர்த்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார், கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் சதம் அடித்த விராட் கோலி டி20 போட்டியில் முதல் முறையாக சதம் அடித்தார். அதன்பின் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து சதம் தனது பழைய பார்முக்கு திரும்பி அசத்தினார்.
சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு :
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி படைக்க வாய்ப்பு உள்ள சாதனைகள் பற்றி காண்போம், ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை விராட் கோலி ஒருநாள் தொடரில் 46 சதங்கள் பதிவு செய்துள்ள நிலையில், இன்னும் 3 சதங்கள் பதிவு செய்தால் சச்சின் டெண்டுல்கர் உடைய சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மைல்கல்லை அடைய வாய்ப்பு :
ஒருநாள் தொடரில் விராட் கோலி இன்னும் 191 ரன்கள் பெற்றால் சர்வதேச அளவில் ஒருநாள் தொடரில் 13000 ரன்கள் பெற்ற 5 வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்வார், இந்த பட்டியலில் முதல் நான்கு இடத்தில்
1) சச்சின் டெண்டுல்கர் - 18426
2) குமார் சங்ககரா - 14234
3) ரிக்கி பாண்டிங் - 13704
4) சனத் ஜெயசூரியா - 13430
ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மண்ணில் முக்கிய சாதனை படைக்க வாய்ப்பு :
தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5358 ரன்கள் பெற்று 3 வது இடத்தில் உள்ளார், மேலும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் மொத்தம் 153 ஒருநாள் போட்டிகளில் 5406 ரன்கள் பெற்று 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ரிக்கி பாண்டிங் உடைய சாதனையை முறியடிப்பார்.இந்த சிறப்பு மிகு பட்டியலில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 164 போட்டிகளில் விளையாடி 6976 ரன்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் ஒருநாள் போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை (மார்ச் 17 2023) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.