சர்வதேச அளவில் முதல் வீரராக விராட் கோலி உடைய தனித்துவமான சாதனை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி வென்றதன் மூலம் சர்வதேச அளவில் முதல் கிரிக்கெட் வீரராக அசத்தல் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 ஆண்டுகள் கழித்து தனது 28 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். மேலும் இந்த போட்டியில் 186(364) ரன்கள் பதிவு செய்து இந்திய அணிக்கு உதவிய நிலையில் போட்டியில் ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்று அசத்தினார்.
இந்த 2023 பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி 2-1 என்ற நிலையில் கைப்பற்றி அசத்தியது, இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் 10வது முறையாக டெஸ்ட் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை விராட் கோலி 38 முறை ஒரு நாள் போட்டிகளிலும், 15 முறை டி20 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 3 வித கிரிக்கெட் தொடர்களிலும் 10 அல்லது அதற்கு மேல் ஆட்டநாயகன் விருதுகள் வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்த விராட் கோலி தற்போது இந்த மகத்துவமான புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.