ஒருநாள் தொடரில் சச்சின் சாதனையை முதலில் முறியடிக்க கோலி மற்றும் ரோஹித் இடையில் போட்டி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடைய சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (17.03.23) நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 71 போட்டிகளில் 9 சதங்கள் பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் அடுத்த இரண்டு இடங்களில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா 40 போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் பதிவு செய்து 2வது இடத்திலும் , விராட் கோலி 43 போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் பதிவு செய்து 3 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சச்சின் டெண்டுல்கர் உடைய சாதனையை இருவரில் யார் முதலில் முறியடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்து முதலில் முறியடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் விராட் கோலி தனது சிறந்த பார்மில் உள்ளார் என்பதால் இந்திய அணியின் வெற்றிக்கு அவரது சிறப்பான ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.