IND VS AUS TEST 2023 : சொந்த மண்ணில் விராட் கோலி சாதனை படைக்க வாய்ப்பு..!! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி புதிய மைல்கல்லை அடைய வாய்ப்பு, தனது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் கோலி சாதனை படைப்பாரா என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பலபரிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி மகத்தான மைல்கல்லை அடைய வாய்ப்புள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இன்னும் 52 ரன்கள் பெற்றால் சர்வதேச அளவில் 25000 ரன்கள் பதிவு செய்வார், மேலும் விராட் கோலி உடைய சொந்த மண்ணான டெல்லியில் இந்த போட்டி நடைபெறுவதால் அங்கு இந்த மைல்கல்லை அடைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி டெஸ்ட் அரங்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தான் கடைசியாக சதம் அடித்தார், மேலும் தற்போது தனது பழைய பார்மில் உள்ள விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க நல்ல வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.இந்திய அணிக்காக கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் சதம் அடித்து தனது பழைய பார்முக்கு திரும்பிய கோலி, இந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் தனது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சர்வதேச அளவில் புதிய மைல்கல்லை அடைவார் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.மேலும் கடைசியாக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச அளவில் 34357 ரன்களை பெற்று மாபெரும் சாதனை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.இந்த போட்டியில் விராட் கோலி 52 ரன்கள் பெற்றால் சர்வதேச அளவில் 25000 ரன்களை பெற்ற 6 வது வீரர் என்ற பெருமையை அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.