IND VS AUS TEST 2023 : அகமதாபாத் டெஸ்டில் விராட் கோலி புதிய சாதனை படைக்க வாய்ப்பு..!! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி முக்கிய சாதனை படைக்க உள்ளார், மேலும் இந்த சாதனை மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், டிராவிட் சாதனைகள் முறியடிக்க உள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், தற்போது இறுதி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி முக்கிய மைல்கல்லை அடைய உள்ளார்.
அதாவது இந்த போட்டியில் விராட் கோலி இன்னும் 42 ரன்கள் பெற்றால் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் பெற்ற 5வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார், மேலும் இந்த 42 ரன்களை விராட் கோலி 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பெற்றால் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் உடைய சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சுனில் காவஸ்கர் ,மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் விராட் கோலி 5 வது வீரராக இடம் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுனில் காவஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் முறையே 87 மற்றும் 88 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விராட் கோலி இந்த அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 42 ரன்கள் பெற்றால் வெறும் 76 இன்னிங்ஸில் 4000 ரன்கள் பெற்று, கவாஸ்கர் மற்றும் டிராவிட் உடைய சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சிறப்புமிகு பட்டியலில் வீரேந்தர் சேவாக் மிகவும் வேகமாக 71 இன்னிங்ஸில் 4000 ரன்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, மேலும் இந்த பார்டர் கவாஸ்கர் தொடரிலும் ரன்கள் பெற தடுமாறி வருவதால் இவை அனைத்திற்கும் இந்த போட்டியில் முற்றுப்புள்ளி வைப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 4வது டெஸ்ட் போட்டியில் தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா அணி 75 ரன்கள் பெற்று 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது, மதிய இடைவேளைக்கு பிறகு இந்திய அணி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்களை பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.