IND VS AUS TEST 2023 : சதம் அடித்து இந்தியாவின் கனவுக்கு தடை போட்ட கவாஜா.!! சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடித்து இந்திய அணியின் கனவுக்கு தடைக்கல்லாக நிற்கிறார்.
இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பலப்பரீட்சை நடந்தது, இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்களை சிதறடிக்கும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா டெஸ்ட் அரங்கில் தனது 14 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கவாஜா முதல் நாள் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பேட்டிங் செய்து சதம் அடித்து அசத்தினார், மேலும் இது இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் உஸ்மான் கவாஜா உடைய முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணியின் பவுலர்கள் டிராவிஸ் ஹெட் 32(44), மற்றும் மார்னஸ் லாபுசாக்னே 3(20) ஆகியோரின் விக்கெட்களை எளிதில் பெற்றனர்.
அதன்பின் கவாஜா உடன் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் 38(135) உடைய விக்கெட்டையும் பெற்றனர், ஆனால் இறுதியாக ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா 104*(251) மற்றும் கேமரூன் கிரீன் 49*(64) ரன்கள் பதிவு செய்து முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எந்த இடையூறும் இல்லாமல் உறுதியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கனவிற்கு தடைக்கல்லாக ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா சதம் அடித்து களத்தில் உள்ளார் என்பதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் பதிவு செய்து வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.