IND VS AUS TEST 2023 : முன்னாள் வீரர்களை பின்தள்ளி உஸ்மான் கவாஜா அசத்தல் சாதனை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய ஆஸ்திரேலியா தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா புதிய சாதனை படைத்து ஆஸ்திரேலியா சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலர்களை திணறடித்து வரும் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கிரஹாம் யாலோப், ஆலன் பார்டர் மற்றும் சக வீரர் ஸ்டீவ் ஸ்மித் உடைய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை போட்டியின் முதல் நாள் முடிவில் பதிவு செய்த கவாஜா, இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் 422 பந்துகளை சந்தித்த கவாஜா 180 ரன்கள் பெற்று தனது விக்கெட்டை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் இடம் இழந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளை சந்தித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை பெற்றார். அதாவது இதற்கு முன் இந்த சிறப்பு மிகு பட்டியலில் ஆஸ்திரேலியா வீரர்கள்
1) கிரஹாம் யாலோப் - 392 (ஈடன் கார்டன் டெஸ்ட், 1979)
2) ஸ்டீவ் ஸ்மித் - 361 (ராஞ்சி டெஸ்ட் , 2017)
3) ஆலன் பார்டர் - 360 (சென்னை டெஸ்ட் , 1979)
4) ஷேன் வாட்சன் - 338 (மொகாலி டெஸ்ட் , 2010)
ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது உஸ்மான் கவாஜா 180 (422) முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா அணி 413 ரன்கள் பதிவு செய்து 8 விக்கெட்டுகளை இழந்து மிகவும் வலுவான நிலையில் உள்ளது, மேலும் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.