அதிவேக பவுலிங்கில் இலங்கை அணியை மிரட்டிய உம்ரான் மாலிக் ..! புதிய சாதனையை படைத்தார்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 11, 2023 & 10:42 [IST]

Share

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முதல்  ஒருநாள் போட்டியில் கவுகாத்தியில் உள்ள பர்சபர கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள்,இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் பவுலர் உம்ரான் மாலிக் அதிரடியான பௌலிங்கை  வெளிப்படுத்தி புதிய சாதனையை படைத்தார்.

இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 373 ரன்களை பதிவு செய்தது,அதன்பின் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் இந்திய அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்,குறிப்பாக இளம் வீரர் உம்ரான் மாலிக் சிறப்பாக பௌலிங் செய்தார்.

இந்திய அணி சார்பில் 8 ஓவர்கள் வீசி 57 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை பதிவு செய்தார்,ஒரு நாள் போட்டிகளில் இவரது சிறந்த பவுலிங் காக இது பதிவு ஆனது.மேலும் அதி வேகமாக பவுலிங் செய்யக் கூடிய உம்ரான் மாலிக் கடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 155 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்து  புதிய சாதனையை படைத்தார்.

இந்நிலையில் நேற்றைய ஒருநாள் போட்டியில் உம்ரான் மாலிக் தனது இரண்டாவது ஓவரில் 156 கி.மீ  வேகத்தில் பவுலிங் செய்து, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக பௌலிங் செய்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

இதற்கு முன்னர் 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில்  உம்ரான் மாலிக் 156.9 கி.மீ  வேகத்தில் பவுலிங் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இவரை போல் அதி வேகமாக பவுலிங் செய்யும் வீரர் இருப்பது அணியின் பௌலிங்கை பலப்படுத்தும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.